Published : 17 Aug 2014 10:41 AM
Last Updated : 17 Aug 2014 10:41 AM

ஊரை விட்டு விரட்டப்படும் எழுத்தாளர்கள்: புதுகை மாவட்டத்தில் தொடரும் அவலம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட சிலரை கிராம மக்கள் ஊரை விட்டே விரட்டியடிக்கும் அவலம் நிகழ்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

எழுத்தாளர்களுக்கு பஞ்ச மில்லாத புதுக்கோட்டை மாவட் டத்தில் மாதந்தோறும் எங்காவது ஓர் இடத்தில் யாருடைய நூலா வது வெளிவந்த வண்ணம் இருக்கும். இதில் சில எழுத்தாளர்கள் போற்றப்படும் நிலையில், சிலர் ஊரை விட்டே விரட்டியடிக்கப்படும் அவ லமும் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான் பட்டு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் து.குண சேகரன். இவர் துரை.குணா என்ற பெயரில் ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற புத்தகத்தை எழுதி அதை ஜூலை 12-ல் கறம்பக்குடி காந்தி பூங்காவில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டுள்ளார். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சின்னத்துரை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் அந்தக் கிராமத்தில் நடந்ததாக எழுதப் பட்டுள்ள சில சம்பவங்கள் உண் மைக்கு புறம்பானது என புத்த கம் எழுதிய குணசேகரனின் குடும் பத்தினருக்கு அந்தக் கிராமத் தினர் மூலம் மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குணசேகரனின் தந்தை துரைசாமி புதுக் கோட்டை மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் அளித்த புகார் மனு விவரம்: எனது மகன் குணசேகரன் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டதற்காக அவர் குடும்பத்துடன் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவரும் என்னையும் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என தினமும் தொல்லை கொடுத்து வருகின்றனர். எங்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டும். இல்லை யேல் குடும்பத்தோடு தற் கொலை செய்துகொள்வோம் என தெரிவித்துள்ளார். புகார் குறித்து விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆலங் குடி காவல் துணைக் கண்காணிப் பாளர் மூலம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தர விட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து குளந்திரான்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தங்க ராஜ் கூறியதாவது: ‘‘குணா எழு திய புத்தகத்தில் இந்தக் கிராமத் தைச் சேர்ந்த சிலர் உறவுகளுக்கும் சமூகத்துக்கும் அப்பாற்பட்டு தவறான உறவு வைத்துள்ளதாக அவர்களது பெயரைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகம் வெளியான தில் எங்கள் கிராமத்தில் உள்ள சிலருக்கு பெருத்த சங்கடம் உருவாகியுள்ளது. மேலும், எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் பெண் களிடம் பல பேர் இதைப் பற்றிக் கேட்பதால் அவர்கள் தர்மசங்கட மான சூழலுக்கு ஆளாகியுள்ள னர். இதை அவரது உறவினர் கள்கூட ஏற்கவில்லை. இந்த அவமானம் தாங்க முடி யாமல் குணா குடும்பத்தினரே தலைமறைவாகி இருக்கலாமே தவிர, நாங்கள் அந்தக் குடும் பத்தினரை வெளியேற்ற வில்லை’’ என்றார்.

இதேபோல, கொத்த மங்கலத்தில் கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு ‘கருவாட்டு ரத்தம்’ என்ற நூலை எழுதிய ம.மு. கண்ணனின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அவர் ஊரைவிட்டு விரட்டியடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்ணன் கூறும் போது, ‘’உண்மையை எழுதியதற் காக என்னை இந்த அளவுக்கு தொந்தரவு செய்கிறார்கள். ஆனால், எனது புகார் மனு மீது கீரமங்கலம் காவல் நிலை யத்தினர் நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போதும் என்னை ஊருக்குள் நுழைய அனுமதிப்ப தில்லை. இவ்வாறு கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு, புதுக் கோட்டை மாவட்டத்தில் புத்தகம் எழுதுவோர் விரட்டியடிக்கப் படும் சம்பவம் குறித்து போலீ ஸார் விசாரித்து நட வடிக்கை எடுக்க வேண்டும். எழுத் தாளர்களுக்கு பாதுகாப்பு அளிக் கப்பட வேண்டும்’’ என்றார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x