எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு வந்த சீன கப்பலில் மூச்சுத் திணறி மாலுமி உயிரிழப்பு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு வந்த சீன கப்பலில் மூச்சுத் திணறி மாலுமி உயிரிழப்பு
Updated on
1 min read

பொன்னேரி: எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு வந்த சீன கப்பலில், சீன நாட்டை சேர்ந்த மாலுமி மூச்சுத் திணறி உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து சீன கப்பல், கடந்த 6-ம் தேதி 22 மாலுமிகளுடன் சரக்கு ஏற்றி கொண்டு புறப்பட்டது. அந்த கப்பல் கடந்த 20-ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு வந்தது. இந்நிலையில், அந்த கப்பலின் ஒரு பகுதியில் சீனாவை சேர்ந்த மாலுமி காங் யுவு(Gong Yuwu)(57) மூச்சுத் திணறி உயிரிழந்து கிடந்தது நேற்று முன் தினம் தெரிய வந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த மீஞ்சூர் போலீஸார், எண்ணூர் காமராஜர் துறைமுகம் விரைந்து, கப்பலில் இருந்து காங் யுவு-ன்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ‘சம்பந்தப்பட்ட சீன கப்பல் கடந்த 6-ம் தேதி இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்த போது கப்பலில் இருந்த 22 மாலுமிகளில், காங் யுவுவைக் காணவில்லை என, இந்தோனேசியா துறைமுகத்தில் புகார் கடிதம் கொடுத்துவிட்டு காணாமல் போன மாலுமிக்கு பதிலாக வேறொரு மாலுமியுடன் அக்கப்பல் புறப்பட்டு சிங்கப்பூர் துறைமுகத்துக்கு சென்றுள்ளது. பிறகு, அங்கிருந்து சென்னை காமராஜர் துறைமுகத்துக்கு வந்துள்ளது’ தெரிய வந்தது.

மேலும், மாலுமி காங் யுவு மூச்சுத் திணறிதான் உயிரிழந்தாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in