Published : 25 Apr 2024 06:05 AM
Last Updated : 25 Apr 2024 06:05 AM
புதுச்சேரி: உடல் பருமனைக் குறைக்க செய்த அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் சென்னை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
புதுச்சேரி வானவில் நகரைச் சேர்ந்தவர் துரை செல்வம். புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றத்தின் பொருளாளர். இவரது மகன்கள் ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரட்டையர்கள். இவர்களுக்கு வயது 26.இதில் ஹேமச்சந்திரன் பிஎஸ்சி முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார்.
உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம்கொழுப்பு நீக்க சிகிச்சை செய்யமுடிவு எடுக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்த தாக குறிப்பிட்டுள்ளனர்.
தவறான சிகிச்சை தந்ததால் இளைஞர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடல்நல ஆரோக்கியத்துடன் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுத்ததில் பிரச்சினை உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.இதைத்தொடர்ந்து உடலை பெற் றுக்கொண்டு நேற்று புதுச்சேரி எடுத்து வந்தனர். இன்று இறுதி சடங்குகள் நடக்கவுள்ளன.
இதுதொடர்பாக சென்னை டி 4-சங்கர் நகர் காவல் நிலையத்தில் துரைசெல்வம் என்ற செல்வநாதன் அளித்த புகாரில், “நான், புதுச்சேரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் லாரி கிளீனர் ஆக பணிபுரிந்து வருகிறேன்.
எனது மூத்தமகன் ஹேமச்சந்திரன் 150 கிலோ எடையுடன் உடல் பருமன் நோயால்அவதிப்பட்டு வந்தார். உடல் எடையை குறைக்க யூடியூப் மூலமாக சென்னையில் உள்ள மருத்துவரை (டாக்டர் பெருங்கோ) தொடர்பு கொண்டார். அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் செல வாகும் என்று தெரிவித்தனர்.
பின்னர் பம்மலில் உள்ள (பி.பி.ஜெயின்) தனியார் மருத்துவமனை மூலம் அறுவை சிகிச்சை செய்ய அதே டாக்டர் மூலம் ஏற்படானது. இதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த 22-ம் தேதி, டாக்டரால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைசெய்யப்பட்டது. அப்போது ஹேமச்சந்திரனுக்கு உடல்நலம் குன்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர் ஆனால் அவர் இறந்து விட்டார்.
தவறான சிகிச்சை அளித்த டாக்டர், மற்றும் பம்மலில் உள்ள அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT