வேலூரில் வெப்பத்தின் தாக்கம் இன்று அதிகரிப்பால் பகலில் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

வேலூரில் வெப்பத்தின் தாக்கம் இன்று அதிகரிப்பால் பகலில் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்
Updated on
1 min read

வேலூர் / ராணிப்பேட்டை / திருப்பத்தூர்: இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று ( புதன் கிழமை ) வெப்பத் தின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பம் அதி கரித்து காணப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய், புதன் ( ஏப்.23, 24 ) ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்திடவும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க் கவும், வெயிலின் தாக்கத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்’’ என தெரி வித்துள்ளார்.

இதேபோல் இன்று வெப்ப அலை வீசுக்கூடும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் வளர்மதி ( ராணிப்பேட்டை ) தர்ப்பகராஜ் ( திருப்பத்தூர் ), ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in