ஹஜ் பயணத்துக்கு 5,637 பேர் முன்பதிவு: ஹஜ் கமிட்டி மாநிலத் தலைவர் தகவல்

ஹஜ் பயணத்துக்கு 5,637 பேர் முன்பதிவு: ஹஜ் கமிட்டி மாநிலத் தலைவர் தகவல்
Updated on
1 min read

திருச்சி: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில், ஹஜ் புனிதப் பயணம்மேற்கொள்பவர்களுக்கான ஒருங்கிணைப்பு வழிகாட்டு பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடை பெற்றது.

இதில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகள் பங்கேற்றனர். அதன்பின், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல்சமது எம்எல்ஏ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்திலிருந்து கடந்த ஆண்டு 4,034 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், நிகழாண்டு 5,637 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவர்களுக்கு விமானக் கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்து செலவு, தங்கும் விடுதி கட்டணம், உணவுக்கான செலவு என ரூ.3.5 லட்சம் செலவாகிறது. இதில் அரசு சலுகை மற்றும் மானியமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஏப்.26-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை 17 கட்டங்களாக ஹஜ் பயணிகள் விமானங்களில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இவர்களுடன் அனுபவமிக்க தன்னார்வலர்களும் செல்கின்றனர். அனைவருக்கும் வழிகாட்டு நெறிமுறை புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in