

சென்னை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னைகடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் இன்று (ஏப்.23)திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட உள்ளது.
அதன் விவரம்: சென்னை கடற்கரையில் இருந்து ஏப்.23-ம் தேதி மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06033) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை இரவு 9.45 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
திருவண்ணாமலையில் இருந்து ஏப்.24-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06034)புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை அதிகாலை 5.35 மணிக்குஅடையும். அங்கிருந்து புறப்பட்டு,சென்னை கடற்கரைக்கு காலை 9.50 மணிக்கு அடையும்.
பாரெளனிக்கு சிறப்பு ரயில்: கோடை காலத்தில் பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில், தாம்பரம் - பீஹார் மாநிலம் பாரெளனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து ஏப்.25, மே 2, 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) மாலை 6.15 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06061) புறப்பட்டு, சனிக்கிழமைகளில் மதியம் 1.55 மணிக்கு பீஹார் மாநிலம் பாரெளனியை சென்றடையும்.
மறுமார்க்கமாக, பாரெளனியில் இருந்து ஏப்.27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (06062) புறப்பட்டு, திங்கள்கிழமை இரவு 10.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது என்று தெற்கு ரயில்வேதெரிவித்துள்ளது.