கேரளத்தில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரிப்பு - தேனி எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு குமுளியில் கிருமி நாசினி தெளித்த பணியாளர்.
கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு குமுளியில் கிருமி நாசினி தெளித்த பணியாளர்.
Updated on
1 min read

கூடலூர்: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் தேனி மாவட்ட தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறையினர் சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்துவா மற்றும் செருதன ஊராட்சிகளில் உள்ள பண்ணைகளில் அதிக எண்ணிக்கையிலான வாத்துகள் உயிரிழந்தன. இறந்த வாத்துகளை ஆய்வு செய்த போது, பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், கேரளாவிலிருந்து நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தேனி மாவட்ட எல்லையான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குமுளி சோதனைச் சாவடியில் கேரளா விலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அதன் பின்பே தமிழகத்துக்குள் அனுமதிக்கப் படுகின்றன. இதேபோல் போடி மெட்டு, கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளிலும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in