Published : 22 Apr 2024 05:38 AM
Last Updated : 22 Apr 2024 05:38 AM
சென்னை: மாநகர பேருந்தில் விருப்பம்போல் பயணிப்பதற்கான ரூ.1000 பயண அட்டை மற்றும் இதர சலுகை அட்டைகளை நாளை (ஏப்.23) வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில், ஏப்.16 முதல் மே 15-ம் தேதி வரை செல்லத்தக்க, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 1 முதல் 22-ம் தேதி வரை, அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இம்மாதம் ரமலான் பண்டிகை (ஏப்.11), தமிழ்ப்புத்தாண்டு (ஏப்.14) மற்றும் மக்களவைத் தேர்தல் (ஏப்.19) ஆகியநாட்களில் விடுமுறை விடப்பட்டது.
பயணிகள் நலன்: இதன் காரணமாக பயணிகள் நலன்கருதி இந்த முறை மாதாந்திர சலுகைஅட்டைகள் மற்றும் ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டையின் விற்பனை ஏப்.23-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT