Published : 22 Apr 2024 05:30 AM
Last Updated : 22 Apr 2024 05:30 AM
சென்னை: உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி, சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் உள்ள சென்னை ரயில் அருங்காட்சியகத்தில் சிறிய ரக ரயில் மாதிரி கண்காட்சி கடந்த 18-ம் தேதிதொடங்கியது.
தேர்தல் வாக்குப்பதிவு நாள் என்பதால் ஏப்.19-ம்தேதி விடுமுறை விடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20, 21) ஆகிய நாட்களில் கண்காட்சி நடைபெற்றது.
இறுதி நாளான நேற்று ஏராளமானவர்கள் சென்னை ரயில் அருங்காட்சியகத்துக்கு வருகைதந்து, சிறு ரயில் மாதிரிகளை பார்வையிட்டனர். 3 நாட்களில் சுமார் 2,500 பேர் கண்காட்சியை பார்வையிட்டு ரசித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி சிறுவர்கள் ஆவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT