வலிமையான தலைமைக்கே மக்கள் ஆதரவு தருவார்கள்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உறுதி

வலிமையான தலைமைக்கே மக்கள் ஆதரவு தருவார்கள்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உறுதி
Updated on
1 min read

சென்னை: அடுத்தகட்டமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற வாக்குப்பதிவிலும் மக்கள் நல்லவர்களுக்கும், வலிமையான தலைமைக்கும் வாக்களிப்பார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கும், குறிப்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் வெற்றிபெற வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணிகட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குஉழைத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி.

தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, பலருக்கு அனைத்து ஆவணங்கள் இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர்விடுபட்டதால், வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விடுபட்ட வாக்காளர்கள் ஜனநாயகமுறைப்படி தங்கள் உரிமையை, கடமையை நிறைவேற்ற முடியாமல்போனது. இதன் காரணமாக, வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாதவாறு சரி செய்து தேர்தல் ஆணையம் கடமையாற்ற வேண்டும்.

அடுத்தகட்டமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற வாக்குப்பதிவிலும் மக்கள் நல்வவர்களுக்கும், வலிமையான தலைமைக்கும் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in