Published : 20 Apr 2024 05:24 AM
Last Updated : 20 Apr 2024 05:24 AM
சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை திட்டமிட்டபடி நடைபெற்றது. தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழக போலீஸாருடன் மத்திய துணை ராணுவப் படையினர், ஓய்வுபெற்ற ராணுவவீரர்கள் உட்பட பலர் ஈடுபட்டிருந்தனர். அனைத்து வாக்குப் பதிவுமையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன.
பதற்றமான வாக்குச்சாவடி கள் மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் அதனருகே போக்குவரத்துநெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதையடுத்து, சென்னையில் போலீஸார் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு குறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு மேற்கொண்டார். அங்குபணியிலிருந்த போலீஸாரை உற்சாகமாகவும், கவனமாகவும் பணி செய்யும்படி அறிவுறுத்தினார். மேலும், வாக்களிக்க வந்த பொதுமக்களிடம் பாதுகாப்பு தொடர்பாக குறைகள் ஏதேனும் உள்ளதா எனவும் கேட்டறிந்தார்.
ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர் ஜமாலியாவில் உள்ளஎவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி,மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளுக்கு அடுத்தடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பதற்றமான வாக்குச்சாவடி கள், மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று முதல்வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி வரை 4அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.
முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர், அடுத்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார், 3-வது ஆயுதப்படை போலீஸார், 4-வதாக சட்டம் ஒழுங்கு போலீஸார் ஒரு உதவி ஆணையர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுவரை சென்னை மாநகரில் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை.
பொது மக்களிடம் விசாரித்தபோது எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வந்து வாக்களிப் பதாகத் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு) ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT