

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணியில் சாலை வசதி இல்லாதது, இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணியில் சாலை வசதி இல்லாதது, இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கல்லூரணியில் உள்ள அவர்களுக்கான வாக்குச் சாவாடியில் ஒரு வாக்கு கூட அவர்கள் பதிவு செய்யவில்லை. இதை கவனித்த கல்லூரணி கிராம மக்களும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்களிக்களிக்க மறுத்தனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் 4 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மொத்தம் அந்த வாக்குச்சாடியில் சீத்தூரணி, கல்லூரணியைச் சேர்ந்த 850 வாக்காளர்கள் உள்ளனர்.