“தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்” - ராமதாஸ் பேட்டி

பட விளக்கம்: திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார்.
பட விளக்கம்: திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார்.
Updated on
1 min read

விழுப்புரம்: "மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்." என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ மரகதாம்பிகை அரசு உதவிபெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களித்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " "மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.

அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும்" என்றார்.

பேட்டியின் போது மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், பாமக விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலர் ஜெயராஜ், முன்னாள் நகரச் செயலர் சண்முகம், வழக்குரைஞர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in