“எனக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது” - பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 

பட விளக்கம்: திண்டிவனம் ஶ்ரீ மரகாதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் வாக்களித்த தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி
பட விளக்கம்: திண்டிவனம் ஶ்ரீ மரகாதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் வாக்களித்த தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி
Updated on
1 min read

விழுப்புரம்: தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணி, திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு குடும்பத்துடன் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிக முக்கியமான நாள் இது. திண்டிவனத்தில் வாக்களித்த பின் தருமபுரி தொகுதிக்குச் செல்கிறேன். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது.

எல்லா தொகுதிகளிலும் என் உடன்பிறந்த, உடன்பிறவா சகோதரர்கள்தான் போட்டியிடுகிறார்கள். நாங்கள் எல்லோரும் கடமையை செய்துள்ளோம். மகளிர் அனைவரும் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

அப்போது மயிலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகரச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in