வாக்களிக்க பயன்படும் 12 ஆவணங்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், ஆதார் உட்பட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள், தங்கள் அடையாளத்தை மெய்ப்பிக்க, மாற்று புகைப்பட அடையாள ஆவணங்கள் 12-ல் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

அதற்கான ஆவணங்கள்: ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சல் கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத்தின் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய அல்லது மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களிக்கலாம்.

அதே நேரம், வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள ‘பூத் சிலிப்’, அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in