

சென்னை: கோடை வெயில் வாட்டிவரும் நிலையில், தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 44.27 கோடி யூனிட் என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தமிழகத்தில் வீடு, தொழிற் சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் ஒட்டுமொத்த தினசரி மின்நுகர்வு சராசரியாக 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் மின்விசிறி, ஏ.சி. உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருகிறது.
வெயில் தாக்கம், ஐபிஎல்: குறிப்பாக, கடந்த மார்ச் 29-ம் தேதி 42.64 கோடி யூனிட்டாக மின் நுகர்வு அதிகரித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரு வதுடன், ஐபிஎல் போட்டி உள்ளிட்ட காரணங்களாலும் மின் நுகர்வு அதிகரித்து கடந்த 2-ம் தேதி 43.01 கோடி யூனிட் என்னும் புதிய உச்சத்தை அடைந் தது.
இதன் தொடர்ச்சியாக, படிப் படியாக உயர்ந்த மின்நுகர்வு, கடந்த 17-ம் தேதி 44.27 கோடி யூனிட் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. எவ்வித தடையுமின்றி இந்த தேவையை மின்வாரியம் பூர்த்தி செய்தது.
வரும் நாட்களில் மின்நுகர்வு மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.