

சென்னை: வாக்குச் சாவடிகளுக்கு அருகே அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும், முதலுதவி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
தமிழகத்தில் வெப்ப அலை பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் வாக்குப் பதிவு நாளான இன்று வாக்காளர்களின் வசதிக்காக சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு புறம் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண் டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மற்றொரு புறம் வாக்காளர்களுக்கு தேவையான மருத்துவஉதவிகளுக்கு சில முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக 108 ஆம்பு லன்ஸ் சேவையின் மாநில செயல் தலைவர் செல்வகுமார் கூறியதாவது:
வெயில் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் முதியவர்கள், இணை நோயாளிகள் போன்றவர்களுக்கு வாக்குப் பதிவின்போது சிலஅசவுகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டுசுகாதாரத் துறை அறிவுறுத்த லின்படி, வாக்குச் சாவடிகளுக்கு அருகே ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு மொத்தம் 1,353 வாகனங்கள் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
குளுக்கோஸ் இருப்புவைப்பு: அதில், குளுக்கோஸ் பாட்டில்கள், உப்பு-சர்க்கரை கரைசல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேவையான எண்ணிக்கையில் மருத்துவஉதவியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். தேர்தல் நாளில்விடுப்பு எடுக்காமல் வருமாறும்அவர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.
அதேபோன்று 108 சேவைக்கான கட்டுப்பாட்டு மையத்திலும்உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. அவசர உதவிகளுக்கு 104 அல்லது 108 எண்களை அழைக்கலாம்.
இவ்வாறு செல்வகுமார் கூறினார்.