

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அதிமுக ஒன்றியச் செயலாளர் காரில் இருந்த ரூ.8.50 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் கிராமத்தில் ஆலத்தூர் சாலையில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக ஆலத்தூர்மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.சசிக்குமார், உரிய ஆவணங்களின்றி காரில் ரூ.8.5 லட்சம் எடுத்துச் செல்வதைக் கண்டுபிடித்து, பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதற்கு, சசிக்குமாரும், அவரதுஆதரவாளர்களும் கடும் எதிர்ப்புத்தெரிவித்து, பறக்கும் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை அங்கிருந்து புறப்பட விடாமல் முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து வந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனிசாமி மற்றும் போலீஸார், சசிக்குமார் உள்ளிட்ட அதிமுகவினரை அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர்.