2016 தேர்தலில் பெரிய சக்தியாக பாஜக உருவெடுக்கும்: புதிய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

2016 தேர்தலில் பெரிய சக்தியாக பாஜக உருவெடுக்கும்: புதிய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
Updated on
2 min read

தமிழகத்தில் 2016-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்று கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பாஜக மாநில தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், மோடி தலைமையிலான அமைச்சர வையில் கனரக மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான இணை அமைச்சராக பதவி ஏற்றுள் ளார். கட்சி விதிகளின்படி ஒருவர் 2 பொறுப்புகளை வகிக்க முடியாது. எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று கடந்த 3 மாதமாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சித் தலைமை சனிக்கிழமை வெளி யிட்டது. இதன்மூலம் தமிழகத் தில் தேசியக் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை தமிழிசை பெற்றுள்ளார்.

தமிழிசையின் அரசியல் பயணம்

குழந்தைகள் நல சிறப்பு மருத் துவரான தமிழிசை சவுந்தரராஜன், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகளாவார். இவரது கணவர் மருத்துவர் சவுந்தரராஜன், சிறுநீரகவியல் நிபுணராக உள் ளார். சிறுவயதிலேயே புகை யிலை, மதுவுக்கு எதிராக குரல் கொடுத்தவர் தமிழிசை. தந்தை காங்கிரஸில் இருந்தாலும், இவருக்கு அந்தக் கட்சியின்பால் ஈர்ப்பு ஏற்படவில்லை. அரசியலில் ஈடுபட வேண்டும் என முடிவு செய்தபோது, அவரது பார்வை பாஜக பக்கம் திரும்பியது.

பாஜகவில் சேர்ந்த தமிழிசை, 1999-ல் மாவட்ட மருத்துவ அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மாநில மருத்துவ அணி பொதுச் செயலாளரானார். அதைத் தொடர்ந்து மண்டல பொறுப்பாளர், தேசிய மருத்துவ அணி இணை பொறுப்பாளர், மாநில பொதுச் செயலாளர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். கடந்த ஆண்டு தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். இப்போது மாநில பாஜகவின் தலை வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து நிருபர்களிடம் தமிழிசை சவுந்த ரராஜன் கூறியதாவது:

பெருமை மிகுந்த தமிழகத்துக்கு பாஜக தலைவராக தேர்வு செய்யப் பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை தேர்வு செய்த தேசியத் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி, பரிந்துரை செய்த மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி. தமிழக மக்களுக்காக உழைக்க கடவுள் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். அனைவரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் கட்சியை வளர்க்க பாடுபடுவேன். 2016-ல் சட்டப் பேரவை தேர்தலில் தமிழக பாஜக மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும். தமிழகத்தில் 1967-க்கு பிறகு தேசிய கட்சிகள் பலவீனமடைந்தன. இந்த நிலையை 2016 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மாற்றியமைக்கும். தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எப்போதும் முன்னுரிமை அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பாஜகவுக்கு முதல்முறை யாக ஒரு பெண் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது குறித்து கேட்ட போது, ‘‘மிகுந்த மகிழ்ச்சியை அளிக் கிறது. அரசியலில் கடுமையாக உழைத்தால் பெண்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது’’ என்றார் தமிழிசை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in