Published : 17 Apr 2024 07:15 AM
Last Updated : 17 Apr 2024 07:15 AM

பாஜகவை வீட்டுக்கு அனுப்பி ‘இண்டியா’ கூட்டணியை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயார்: தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை: பாஜகவை வீட்டுக்கு அனுப்பி ‘இண்டியா’ கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

தென்சென்னை திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரத்துக்கு இடையே, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் சிறப்பு நேர்காணலில் அளித்த பதில்கள்:

கடந்த தேர்தலில் முதல்முறை பிரச்சாரத்துக்கும், தற்போது 2-வது முறையாக போட்டியிடும் போது உள்ள பிரச்சாரத்துக்கும் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?

கடந்த முறையைவிட தற்போதைய பிரச்சாரத்தில், திராவிட மாடல் அரசின் சமூகநீதி திட்டங்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளதைக் காண முடிகிறது.

தென்சென்னையில் உங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து? - முதல்வர் தலைமையில் இரண்டரை ஆண்டுகள் சிறப்பாக செயல்படும் திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் மக்கள் அடைந்த பயன்கள், தென்சென்னை தொகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட அடிப்படை கட்டமைப்பு, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள், சித்தாலப்பாக்கம் கிராமத்தை தத்தெடுத்து முன்மாதிரி கிராமமாக மாற்றியது, பெருவாரியான மக்களை சென்றடைந்த பிரச்சாரம், பாஜக அரசின் மேல் மக்களுக்குஉள்ள கோபம், நம்பகத்தன்மை யற்ற அதிமுகவின் மீதுள்ள வெறுப்பு இவற்றால் அதிக வாக்குவித்தியாசத்தில் மக்கள் என்னை மீண்டும் வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகிறேன்.

தேர்தல் களத்தில் உங்களுக்கு சவாலாக இருப்பது அதிமுகவா, பாஜகவா? - கடந்த 10 ஆண்டுகளாக ஆளும்பாஜக அரசு, தமிழக மக்களுக்காகஎந்தவொரு நல்வாழ்வுத் திட்டத்தையும் கொண்டுவராமல் வஞ்சித்து வருகிறது. அதிமுக, தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது, தென்சென்னை தொகுதிக்கு எந்தவொருதிட்டத்தையும் செயல்படுத்த வில்லை. இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் தென்சென்னை மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

தென்சென்னை தொகுதி வாக்காளர்களுக்கு உங்கள் வாக்குறுதிகள்? - பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான ‘ஒன்ஸ்டாப் சென்டர்’ அமைக்க நடவடிக்கை, சென்னை - கடலூர் இடையே பெருங்குடி மார்க்கமாக புதிய ரயில் பாதை திட்டம், தென்சென்னை தொகுதியில் உள்ள பிரதான சாலை சந்திப்புகளில் நடைமேம்பாலம், ஆகாய நடைமேம்பாலம், நகரும் படிக்கட்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஓஎம்ஆர், இசிஆர் சாலை பகுதிகளில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேளச்சேரி ரயில் நிலையம் அருகில், பேருந்து நிலையத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில்புதிய பேருந்து நிலையம்அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும்.

குழந்தைகளின் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை அதிகரிக்க, தென்சென்னை தொகுதியில் உள்ள பள்ளிகளில் நவீன ஸ்மார்ட் வகுப்பறை வசதி செய்ய நிதி ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளேன்.

பாஜகவின் ஹாட்ரிக் வெற்றியை தடுத்து, ‘இண்டியா’ கூட் டணி மத்தியில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா? - கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், நாட்டில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை, கேள்விக்குறியான நாட்டின் பொருளாதாரவளர்ச்சி, அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றுடன் இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி, ஒட்டுமொத்த இந்திய மக்களை துயரத்தில் ஆழ்த்திய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி, ‘இண்டியா’ கூட்டணியை ஆட்சியில்அமர்த்த மக்கள் தயாராகி விட்டார் கள்.இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x