Last Updated : 16 Apr, 2024 07:09 PM

 

Published : 16 Apr 2024 07:09 PM
Last Updated : 16 Apr 2024 07:09 PM

கோடை விடுமுறை: விசாகப்பட்டினம் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம்: கோடை விடுமுறையை முன்னிட்டு, சேலம், ஈரோடு வழியாக, விசாகப்பட்டினம்- கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகளில் கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், பலரும் சுற்றுலா செல்வதில் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு, விசாகப்பட்டினம்- கொல்லம் இடையே இரு மார்க்கத்திலும் வாரந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் துவ்வாடா, சாமல்கோட், ராஜமுந்திரி, ஏளூரு, விஜயவாடா, தெனாலி, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கணாச்சேரி, திருவல்லா, செங்கண்ணூர், மாவேலிக்கரை, காயங்குளம் வழியாக இயக்கப்படவுள்ளன.

இதன்படி, விசாகப்பட்டினம்- கொல்லம் வாராந்திர சிறப்பு ரயிலானது (எண்.08539), நாளை (17-ம் தேதி) முதல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் விசாகப்பட்டினத்தில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்பட்டு, ஜோலார்பேட்டை நள்ளிரவு 12.05 மணி, சேலம் நள்ளிரவு 1.22 மணி, ஈரோடு நள்ளிரவு 2.45 மணி, திருப்பூர் நள்ளிரவு 3.30 மணி, போத்தனூர் அதிகாலை 4.48 மணி என வந்தடைந்து, கொல்லம் ரயில் நிலையத்துக்கு மறுநாள் மதியம் 12.55 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் ஜூலை 3 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. கொல்லம்- விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரயிலானது (எண்.08540), வரும் 18-ம் தேதி முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து, இரவு 7.35 மணிக்குப் புறப்பட்டு, போத்தனூர் நள்ளிரவு 3,33 மணி, திருப்பூர் அதிகாலை 4.15 மணி, ஈரோடு காலை 5.05 மணி, சேலம் காலை 6.12 மணி, ஜோலார்பேட்டை காலை 8.35 மணி என வந்தடைந்து, விசாகப்பட்டினத்துக்கு மறுநாள் இரவு 11.20 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் ஜூலை 4 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x