

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜயபிரபாகரனை ஆதரித்து, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்துக்கு முன்னதாக சாத்தூர் அருகேயுள்ள மேட்டுப்பட்டியில் காரில் வந்துகொண்டிருந்த சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனை சிலர் திடீரெனத் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவியது.
முன்னாள் எம்எல்ஏ மீது முன்விரோதம் கொண்டிருந்த அதிமுகவினர் சிலர் அவரைத் தாக்கியதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் தரப்பில் போலீஸில் புகார் ஏதும் செய்யவில்லை. அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, செல்போன் அழைப்பை அவர் எடுக்கவில்லை.