வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு தீவிரம்: மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர் (மத்திய சென்னை) அலுவலத்தில் நேற்று நடைபெற்ற காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர் (மத்திய சென்னை) அலுவலத்தில் நேற்று நடைபெற்ற காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Updated on
1 min read

சென்னை: சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏப்.19-ம்தேதி நடைபெறுகிறது. வடசென்னை தொகுதியில் பதிவாகும் வாக்குகள், ராணி மேரி கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, வட சென்னை மற்றும் மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற காவல்துறையினருக்கான நீட்டிக்கப்பட்ட தபால் வாக்குப்பதிவை பார்வையிட்டார். பின்னர், ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான விநாடி - வினாபோட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வுகளின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் (மத்திய சென்னை) கே.ஜெ.பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in