

சென்னை: அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மத்தியக் குழு தலைவர் நரேன் சாட்டர்ஜி, பொதுச்செயலாளர் ஜி.தேவராஜன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாஜக ஆட்சியை அகற்றி, ஜனநாயக மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கான முயற்சிகளுக்கு ‘இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்தது ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.