பாரதிதாசன் மகள் மரணம்

பாரதிதாசன் மகள் மரணம்
Updated on
1 min read

பாவேந்தர் பாரதிதாசனின் 2-வது மகள் வசந்தா, புதுச்சேரியில் புதன் கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது.

பாரதிதாசனின் 2-வது மகளும், மறைந்த தண்டபாணி என்பவரின் மனைவியுமான வசந்தா(84) புதன்கிழமை பிற்பகலில் காலமானார். புதுச்சேரியில் முத்தியால்பேட்டில் வசந்த் நகர் யமுனை வீதியில் உள்ள அவருடைய இல்லத்தில் இருந்து இன்று காலை அவரது இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. கருவடிக்குப்பம் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. இவருக்கு தமிழ் செல்வம் என்ற மகள் மற்றும் பாண்டியன், டாக்டர் சேரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

பாவேந்தர் பாரதிதாசன் வசித்த வீடு அருங்காட்சியமாக உள்ளது. அந்த அருங்காட்சியக நூலகராக வசந்தா பணிபுரிந்து 1992-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in