Published : 13 Apr 2024 06:34 AM
Last Updated : 13 Apr 2024 06:34 AM
கோவை: கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற்றால், கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பான வளர்ச்சியைப் பெறும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் கூறினார்.
கோவை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு பாஜக கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கர்நாடகா மாநிலத்தில் சிங்கமாக திகழ்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. பொதுமக்கள் நலனுக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலுக்கு வந்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். அண்ணாமலை நேர்மையானவர். அண்ணாமலை வெற்றி பெற்றால், கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பான வளர்ச்சியைப் பெறும் என்பது உறுதி. இவ்வாறு நாரா லோகேஷ் பேசினார்.
தொடர்ந்து அண்ணாமலை பேசும்போது, ‘‘தமிழகத்தில் அரசியல் மாற்றம் அவசியம். கோவையில் சாலை, குடிநீர் பிரச்சினைகள் அதிகம் உள்ளன. இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக அரசியல் புரட்சி ஏற்பட வேண்டும். கோவை மக்கள் தாமரையை மலரச் செய்யவேண்டும். வலிமையான நாடாகஇந்தியாவை பிரதமர் மோடி உயர்த்தி உள்ளார். ஆந்திராவில் மாற்றம் ஏற்படும். அதேபோல, தமிழகத்திலும் மாற்றம் உருவாகும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT