

உதகை: தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக வந்துள்ள புகார் குறித்து நீலகிரி ஆட்சியர் மு.அருணா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் செலவின விவரங்களையும், தேர்தல் அதிகாரியிடம் கேட்டேன். ஆனால், திமுக வேட்பாளரின் செலவு விவரங்கள் மட்டும் உள்ளதாக கூறினார். இதனால், அதை மட்டும் நான் பார்வையிட்டேன்.
அதில் நிறைய வித்தியாசங்கள் இருந்ததால் கண்டித்தேன். தேர்தல் விதிமுறைப்படிதான் செயல்படுகிறோம். அவரை மிரட்டினேன் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது'’ என்றார்.