மோடி, அண்ணாமலை உருவம் பொறித்த புத்தாண்டு அட்டை பறிமுதல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: எழும்பூரில் நடந்த வாகன சோதனையில் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவம் பொறித்த புத்தாண்டு அட்டைகள் அடங்கிய 17 அட்டை பெட்டிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தொகுதி வாரியாக வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் எழும்பூர் லாங்ஸ் கார்டன் சந்திப்பில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக வந்த சரக்கு வேனை சோதனையிட்டனர். அதில் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரது உருவம் பொறித்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் அடங்கிய 17 அட்டைப் பெட்டிகள் இருந்தன.

இதையடுத்து, ஓட்டுநர் திருநாவுக்கரசுவிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உரிய ஆவணங்கள் இன்றி ராயப்பேட்டையில் இருந்து கொளத்தூர் பகுதிக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், எழும்பூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in