

தேனி: திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் இரவு பூமலைக்குண்டு கிராமத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது விவசாயிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.டி.ஆர். 18-ம் கால் வாய்களில் சில மாதங்களுக்கு முன்பு பாசனத்துக்கு நீர் திறக்க பல்வேறு போாரட்டங்களை நடத்தினோம்.
முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் தனித்தனியே போராட்டங்களை நடத்தினர். ஆனால், அரசாணைப்படியே நீர் திறக்கப்படும் என்று நீங்கள் கூறினீர்கள். எந்த ஆண்டும் இல்லாமல் இம்முறை பல கட்சிகளும், அமைப்புகளும் போராடிய பிறகே அதுவும் தாமதமாகவே நீரை பெற முடிந்தது என்றனர்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சாலையோரம் இருந்த ஒலிபெருக்கியின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, இரைச்சலாக இருந்ததால் தங்க தமிழ்ச்செல்வன் கிளம்பிச் சென்றார்.