Published : 13 Apr 2024 05:25 AM
Last Updated : 13 Apr 2024 05:25 AM

கூவாகம் திருவிழாவில் ஆணுறை பெட்டி வைக்க வேண்டாம்: ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் மனு அளித்த திருநங்கைகள்.

கள்ளக்குறிச்சி: கூவாகம் திருவிழாவில் திறந்தவெளியில் ஆணுறை பெட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும் என திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவா கம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா 18 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 9-ம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியுள்ளது.

23-ம் தேதி முக்கியத் திருவிழாவான சுவாமி கண் திறத்தல் மற்றும் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து மறுநாள் விதவைக் கோலம் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங் கைகள் சிலர் நேற்று கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

மனு தொடர்பாக திருநங்கை சிந்து கூறுகையில், “கூத்தாண்டவர் கோயில் திருவிழா பிரசித்தி பெற்றது. திருநங்கைகள் மட்டுமின்றி, பொதுமக்களும் குடும்பத்து டன் வந்து வழிபடக் கூடிய இடம் இது. இத்தகைய புனிதமான இடத்தில் பாலியல் தொழிலுக்கான இடமாககருதும் வகையில் திறந்தவெளியில் ஆணுறை பெட்டிகள் வைக்கப்படு கின்றன. இதனால் கோயிலுக்கு வரும் பொதுமக்கள் மத்தியில் ஒருவிதமான அருவெறுப்பு ஏற்படுவதோடு, கோயிலின் புனிதத் தன்மையும் சிதைக்கப்படுகிறது.

எனவே கோயில் வளாகத்தில் ஆணுறை பெட்டி வைப்பதை மாவட்ட நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித் துள்ளோம். ஆட்சியரும் எங்களது கருத்தை ஏற்றுக்கொண்டு, ஆணுறை பெட்டி வைக்கப்படாது என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் இந்த விழா வையொட்டி, கூவாகம் அழகிப் போட்டியை வேறு மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் நடத்து வதை தவிர்த்து, கோயில் வளாகத்திலேயே இதற்கான போட் டியை நாங்களே நடத்த முடிவுசெய்துள்ளோம்” என்று தெரிவித் தார். ஆட்சியரும் எங்களது கருத்தை ஏற்று வைக்கப்படாது என்று உறுதி அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x