

சிங்கம்புணரி: ‘‘பாஜக, அமலாக்கத்துறை, வருமானவரி, சிபிஐ ஆகிய நான்கும்தான் பாஜக கூட்டணி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ப.சிதம்பரம் பேசிய தாவது: தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. அதேபோல் இந்திய அளவில் காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. ஆனால் பாஜக, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய நான்கு தான் பாஜக கூட்டணி.
எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்றால், பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் புனிதர்களா? குற்றம் சாட்டப்பட்டவன் குற்றவாளி அல்ல; நீதிபதி தீர்ப்புக்குப் பிறகுதான் குற்றவாளி. எதிர்க்கட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வுக்கு மாறினால் புனிதராகி விடுகிறார். தமிழகத்துக்கு எந்த திட்டங்களையும் தராமல் மோடி அரசு வஞ்சிக்கிறது. வரி மீது வரி விதிக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும்.
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், வரிக்கு வரி விதிக்கும் முறையை ஒழித்து பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.