“ஆட்சி நன்றாக இருந்தால் மக்கள் ஏன் மாற்றத்தை விரும்ப போகிறார்கள்?” - நடிகர் கார்த்திக்

மதுரை கீழப்பனங்காடி பகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு  ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் கார்த்திக்.
மதுரை கீழப்பனங்காடி பகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் கார்த்திக்.
Updated on
1 min read

மதுரை: ஆட்சி நன்றாக இருந்தால் மக்கள் ஏன் மாற்றத்தை விரும்பப் போகிறார்கள் என்று நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.

மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சி தலைவருமான கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் எனது மூத்த சகோதரர் மகன். அவர் வரட்டும். சரத்குமார் எனது நண்பர். ராதிகாவும் எனக்கு தெரிந் தவர்தான். அவரும் வரட்டும். யார் வர வேண்டும் என மக்களே முடிவு செய்வர்.

அரசியல் கட்சியினர் மக்களுக்கு சேவை செய்ய வருகின்றனர். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நமது பயணம் அமைய வேண்டும். பொருளாதாரப் பாதுகாப்பு, தேசப் பற்று முக்கியம். நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். அவர் சரியான வயதில்தான் அரசியலுக்கு வருகிறார். அவரது அண்ணனாக எனது ஆசை என்னவென்றால், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும். நடித்துக்கொண்டே அரசியலை தொடர வேண்டும்.

சில கருத்துகளை திரையில் சொல்லும் போது வேகமாக பரவும். தமிழகத்துக்கு மோடி வருவதற்கு உரிமை உள்ளது. அவரது போக்கு சரியில்லை என்றால் மக்கள் மாற்றி விடு வார்கள். ஆட்சி நன்றாக இருந்தால் மக்கள் ஏன் மாற்றத்தை விரும்பப் போகிறார்கள். ஓபிஎஸ் தனித்து போட்டி யிடுகிறார். இருப்பினும், அவர் மரியாதைக்குரியவர். அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து மதுரை கீழப்பனங்காடி உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பிரச்சாரம் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in