மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் குடிநீருக்காக விநாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலையுடன் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை 9 டிஎம்சி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்படும். ஆனால் அணையில் போதிய நீர்இல்லாததால், கடந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால், குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கவாய்ப்புள்ளது. எனவே, குடிநீருக்காவது குறைந்த அளவு தண்ணீர்திறக்க வேண்டும் எனறு விவசாயிகள்கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கடந்த 27-ம் தேதி மாலை 4.30 மணி முதல் அணையிலிருந்து விநாடிக்கு 200 கனஅடி நீர் கிழக்கு, மேற்கு கால்வாயில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியுடன் கிழக்கு, மேற்குகால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 74 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 85 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்துகுடிநீர் தேவைக்காக விநாடிக்கு2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 57.30 அடியாகவும், நீர் இருப்பு 22.71 டிஎம்சியாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in