Published : 11 Apr 2024 07:36 AM
Last Updated : 11 Apr 2024 07:36 AM

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் திருவள்ளூரில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

படங்கள்: ம.பிரபு

திருவள்ளூர்: திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) - திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ்அதிகாரியான சசிகாந்த் செந்திலுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, குஜராத்காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ்மேவானி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் ஏற்கெனவே வாக்கு சேகரித்துள்ளனர்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்
மாதவரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், நேற்று மாலை திருவள்ளூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மாதவரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சசிகாந்த் செந்திலுக்கு வாக்கு சேகரித்தனர்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் பேரணி சகிதம் திறந்த வாகனத்தில் சசிகாந்த் செந்தில் வாக்கு சேகரித்தார்.

பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி, கடம்பத்தூர் ஊராட் சி ஒன்றிய
பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பொன்.வி.பாலகணபதி(பாஜக) - பாஜக வேட்பாளர் பொன். வி.பாலகணபதியை ஆதரித்து, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அனுராக் சிங் தாக்கூர், பாஜக தேசியமகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதற்கிடையே நாள்தோறும்கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள்,தொண்டர்களுடன் பாலகணபதி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி, திருவாலங்காடு ஊராட் சி ஒன்றிய
பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கு.நல்லதம்பி (தேமுதிக): அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கு.நல்லதம்பியை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல்ரஹீம், தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்எல்ஏக்களுடன் வாகனத்தில் தீவிர பிரச்சாரத்தில் கு.நல்லதம்பி ஈடுபட்டு வருகிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர், மாதவரம் பகுதிகளில்
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மு.ஜெகதீஷ் சந்தர்(நாம் தமிழர்): நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தருக்காக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், மாதவரம் பகுதிகளில் ஏற்கெனவே வாக்கு சேகரித்துள்ளார்.

மு.ஜெகதீஷ் சந்தர், நாள் தோறும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் காலை முதல், இரவு வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x