Published : 11 Apr 2024 04:10 AM
Last Updated : 11 Apr 2024 04:10 AM
சிவகங்கை: தேர்தல் ஆணையம், அமலாக் கத்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மோடி ‘பேஷன் ஷோ’ நடத்தினாலும் தமிழக மக்கள் வேடிக்கை பார்ப்பர்; வாக்களிக்க மாட்டார்கள். பிரதமர் தமிழகம் வருவதைப் போன்று மணிப்பூருக்கும் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். பாஜக வேட்பாளருடன் தொடர்புடையவர்களிடம் ரூ.4 கோடி பிடிபட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
முதல்வர் ஸ்டாலினை பொய் மூட்டை என்று பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், அவர் சொன்னபடி மகளிர் உரிமைத் தொகை வழங்கினார். பழனி சாமி ஏற்கெனவே கூட்டணி வைத்திருந்த மோடி தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. மோடியை பழனிசாமி விமர்சிப்பதில்லை. இதன் மூலம் இருவரும் ரகசிய உறவு இருப்பது தெரிகிறது. அதிமுக, பாஜக இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT