

ராமநாதபுரம்: ஓபிஎஸ்சையும், என்னையும் வீழ்த்த திமுகவும், பழனிசாமியும் மறைமுக கூட்டணி வைத்து செயல்படுகின்றனர் என முதுகு ளத்தூரில் அமமுக பொதுச் செய லாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையில் இணைந்து கூட்டணி வைத்துள் ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி என அனைவருக்கும் தெரியும். திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியாது. 3 முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம், தேவைப்படும் போது முதல்வர் பதவியை திருப்பி ஒப்படைத்தார்.
சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவியை பெற்றவர் பழனிசாமி. இப்போது சசிகலா காலில் விழுந்ததற்கு மூத்தவர் அதனால் தான் காலில் விழுந்தேன் என விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து திமுக சார்பில் வேட் பாளராக நிறுத்தப் பட்டவரின் மகன் தான் தற்போதைய ராமநாதபுரம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள். தேனியில் நானும், ராமநா தபுரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் வெற்றி பெறக் கூடாது என திமுகவும், பழனிசாமியும் மறை முக கூட்டணி வைத்து செயல்பட்டு வருகின்றனர். மோடி தலைமையில் நானும், ஓபிஎஸ்ஸும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி காண்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் தர்மர் எம்.பி., பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், அமமுக மாவட்டச் செயலாளர் முருகன், தமமுக மாவட்டச் செயலாளர் சேகர், பாமக மாவட்டச் செயலாளர்கள் அஜித் ( கிழக்கு ), ஹக்கீம் ( மேற்கு ), தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராம மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.