Published : 11 Apr 2024 04:14 AM
Last Updated : 11 Apr 2024 04:14 AM
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக் கொடி கட்டியுள்ளனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில், அதிமுக கூட்டணியில் போட்டி யிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக் நேற்று பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதை அறிந்த கிராமத்தில் வாழும் இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் ஒன்றுகூடி பேசினர். எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் தங்கள் பகுதிக்கு வந்து வாக்கு சேகரிக்க எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்தனர். இதையடுத்து கிராம தெருக்களில் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது பற்றி கோடாங்கி நாயக்கன்பட்டி ஜமாத் நிர்வாகிகள் கூறியதாவது: இஸ்லாமியர்களின் பாதுகாவலர் எனச் சொல்லிக்கொண்டு வாக்குச் சேகரிக்கும் வேட்பாளரின் செயல்பாட்டால் கோடாங்கி நாயக்கன்பட்டி இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர் களுக்குள் இருக்கும் ஒற்றுமையை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் வேட்பாளர் முகமது முபாரக், ஊருக்குள் வந்து பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தில் கருப்புக்கொடி கட்டி உள்ளோம் என்று கூறினர்.
இதையடுத்து அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவினர் வருவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. வேட்பாளருக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், எங்கள் எதிர்ப்பை மீறி ஊருக்குள் வந்தால் யாரும் வெளியில் வராமல் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொள் வோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை வரை கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமத்தில் எஸ்டிபிஐ வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொள்ள வ ரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT