அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு நடிகர் கார்த்திக் பிரச்சாரம் - அட்டவணை வெளியீடு

கார்த்திக் | கோப்புப்படம்
கார்த்திக் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனித உரிமைக் காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் ஏப்ரல் 16-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்ட தகவல்: வரும் ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலில், அதிமுக சார்பிலும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மனித உரிமைக் காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் ஏப்.9 முதல் ஏப்.16-ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

ஏப்.10ம் தேதி புதன்கிழமை மதுரையிலும், ஏப்.11ம் தேதி தேனியிலும், ஏப்.13ம் தேதி சிவகங்கையிலும், ஏப்.14ம் தேதி திருநெல்வேலியிலும், ஏப்.15ம் தேதி விருதுநகரிலும், ஏப்.16ம் தேதி திருச்சியிலும், ஏப்.17ம் தேதி கோவையிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவதற்காக, நடிகர் கார்த்திக்கை அதிமுக களம் இறக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in