தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் நேற்று அன்புமணியின் 2-வது மகள் சங்கமித்ரா பிரச்சாரம் மேற்கொண்டார்.
தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் நேற்று அன்புமணியின் 2-வது மகள் சங்கமித்ரா பிரச்சாரம் மேற்கொண்டார்.

சவுமியா அன்புமணி வெற்றிக்காக உழைக்கும் மகள்கள்!

Published on

தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். அவரது மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் அம்மாவுக்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். முதல் மகளான சம்யுக்தா கடந்த வாரத்தில் சில நாட்கள் தன் குழந்தைகளான அகிரா, மிளிர் ஆகியோருடன் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

2-வது மகளான சங்கமித்ரா தன் கணவர் ஷங்கர் பாலாஜியுடன் வந்து தொகுதியிலேயே தங்கியிருந்து பிரச்சாரம் செய்து வருகிறார். 3-வது மகள் சஞ்சுத்ராவும் தொகுதியில் தங்கியிருந்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கல்லூரி தேர்வுக்காக நேற்று மாலை சென்னை சென்றுவிட்டார்.

வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில், ‘பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் மகள் வந்துருக்கேன்..’ என அறிமுகப்படுத்திக் கொண்டு அவருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். பாமக வேட்பாளரின் மகள்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவர்களிடம் கேட்டால், ‘மம்மியை டெல்லிக்கு அனுப்புவது ஒன்றே இப்போதைக்கு எங்களின் நோக்கம்..’ எனக் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in