Published : 10 Apr 2024 05:50 AM
Last Updated : 10 Apr 2024 05:50 AM

கோடை விடுமுறையில் பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து நெல்லை, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்

சென்னை: கோடைக்கால விடுமுறையையொட்டி, பயணிகள் வசதிக்காக,சென்னையில் இருந்து திருநெல்வேலி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டு கோடை விடுமுறைக்காக, சென்னையில் இருந்துசொந்த ஊர்களுக்கும், குளிர்பிரதேசங்களுக்கும் பொதுமக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். இதற்காக 3 மாதங்களுக்கு முன்பே ரயில்கள் டிக்கெட் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் நெரிசலுடன் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதுதவிர, முக்கிய வழித்தடங்களில் நாள்தோறும் இயக்கப்படும் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்துதிருநெல்வேலி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்குரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலியில் இருந்து ஏப்.11, 18, 25, மே 2, 9, 16, 30 ஆகியதேதிகளில் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரயில் (06070) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து ஏப்.12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் (06069) புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகியநிலையங்களில் நின்று செல்லும்.

முன்பதிவு தொடக்கம்: சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.10, 17, 24 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (06043) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலியை அடையும். மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து ஏப்.11, 18, 25ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) மாலை 6.25 மணிக்குசிறப்பு ரயில் ( 06044) புறப்பட்டு, மறுநாள் காலை 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், செங்கானூர், கொல்லம் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x