கடலூர் | திருமாவளவன் வீட்டில் வருமான வரி சோதனை

சிதம்பரத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருக்கும் வீடு.
சிதம்பரத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருக்கும் வீடு.
Updated on
1 min read

கடலூர்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக, இவர் சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டில் தனது கட்சி நிர்வாகிகளுடன் தங்கி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் கடலூர் பிரிவு வருமான வரித்துறை உதவிஆணையர் பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அங்குசென்று, வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை செய்தனர். குறிப்பாக திருமாவளவன் தங்கி இருக்கும் அறையை நீண்டநேரம் சோதனை செய்தனர்.ஆனால் எதுவும் கைப்பற்றப்பட வில்லை. பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இருப்பினும், அவர்கள் புறவழி பகுதியில் காரில் இருந்தவாறு, திருமாவளவன் தங்கி இருந்த வீட்டுக்கு வந்து செல்வோரை தொடர்ந்து கண்காணித்தனர். அதன் பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றனர். வருமான வரி சோதனையின்போது, திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் பிரச்சாரத்தில் இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in