

விருதுநகர்: விருதுநகர் - மதுரை தேசியநெடுஞ்சாலையில் சத்திரரெட்டியபட்டி விலக்குப் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் நடராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையிலிருந்து வந்த தனியார் பாதுகாப்பு நிறுவன ஜீப் ஒன்றில், ரூ.4.09 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.4.28 லட்சம் மதிப்பிலான 5.5 கிலோ வெள்ளி நகைகள் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட இருந்ததுதெரிய வந்தது. ஆனால், உரியஆவணங்களின்றி கொண்டு வந்ததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறி முதல் செய்தனர். பின்னர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.