

மேட்டுப்பாளையம்: நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை ஆதரித்து, திரைப்பட நடிகையும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா நேற்று மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘கொடுமையான கரோனா காலத்தில் உயிர் பயத்தில் அனைவரும் முடங்கி கிடந்த போது இந்தியா என்னவாகும் என உலக நாடுகள் எதிர்பார்த்த நேரத்தில், குறுகிய காலத்தில் அதற்கான தடுப்பூசியை உற்பத்தி செய்து நம் நாட்டு மக்களை காப்பாற்றியவர் விஷ்வ குரு பிரதமர் நரேந்திர மோடி. நமக்கு மட்டுமல்ல உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இந்த தடுப்பூசியை அனுப்பினார்.
நமது தமிழ் மண்ணையும், கலாச்சாரத்தையும் காப்பவர் மோடி. தமிழகத்தின் செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைத்தார். எனவே, பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.