Published : 09 Apr 2024 05:35 AM
Last Updated : 09 Apr 2024 05:35 AM

சென்னையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக 16 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

சென்னை: சென்னையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக 16 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நியமித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் 3 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு அந்தந்த மாநகராட்சி வட்டார துணை ஆணையர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிகளை எளிமைப்படுத்தும் விதமாக தற்போது அவர்களுக்கு கீழ், சட்டப்பேரவை தொகுதி அளவில் 16 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் 16 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வட சென்னை மக்களவை தொகுதியில் வரும் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர் எஸ்.வாசுகி (73388 01243), பெரம்பூர் தொகுதிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனுசுயாதேவி (94450 00901), கொளத்தூர் தொகுதிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இணை ஆணையர் வி.முத்துசாமி (90951 54565), திரு.வி.க.நகர்தொகுதிக்கு தமிழ்நாடு சர்க்கரை கழக பொதுமேலாளர் ஐ.மகாலட்சுமி (80155 02885), ராயபுரம் தொகுதிக்கு தமிழ்நாடு சிறு தொழிற்சாலை கழக பொதுமேலாளர் எஸ்.தனலிங்கம் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் வரும் வில்லிவாக்கம் தொகுதிக்கு மாநில தொழிற்சாலை மேம்பாட்டுக் கழக பொதுமேலாளர் எம்.காசிசெல்வி (9677851335), எழும்பூர் தொகுதிக்கு நில அளவை ஆணையரக அதிகாரி எச்.எம்.குழந்தைசாமி (9944914120), துறைமுகம் தொகுதிக்கு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைத் துறை கூடுதல் இயக்குநர் பி.மணிவண்ணன் (7358144619), சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு தமிழ்நாடு சிமென்ட் கழக பொதுமேலாளர் வி.சங்கர நாராயணன் (94865 91402), ஆயிரம் விளக்கு தொகுதிக்கு டேம்ப்கால் பொதுமேலாளர் என்.ராகவேந்திரன் (90477 99947), அண்ணாநகர் தொகுதிக்கு அரசு கேபிள் நிறுவன பொதுமேலாளர் செந்தில்குமார் (8270489470) ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தென் சென்னை மக்களவை தொகுதியில் வரும் விருகம்பாக்கம் தொகுதிக்கு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ஆர்.பன்னீர்செல்வம் (96293 28933), சைதாப்பேட்டை தொகுதிக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயலர் துர்கா மூர்த்தி (94450 74956), தியாகராயநகர் தொகுதிக்கு சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி (94451 90740), மயிலாப்பூர் தொகுதிக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக பொதுமேலாளர் விஜயலட்சுமி (70100 34495), வேளச்சேரி தொகுதிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் எஸ்.கவிதா (99629 556) ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் புகார்கள், நடவடிக்கைகள் தொடர்பாக இவர்களை அணுக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x