Published : 09 Apr 2024 06:08 AM
Last Updated : 09 Apr 2024 06:08 AM
பல்லாவரம்: பல்லாவரம், பெருமாள் நகரில் பிரசித்தி பெற்ற நீலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கி.பி.20-ம்நூற்றாண்டை சேர்ந்த இக்கோயில், பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக கருதப்படுகிறது.
இக்கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்த துரைசாமி என்பவர் இறந்த பிறகு பல்வேறு தனி நபர்கள் நிர்வகித்து வந்தனர். இந்த காலக் கட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான நகரில் மையப் பகுதியில் இருந்த பல ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலத்தை மீட்க கோயிலை நிர்வகித்து வந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றொரு புறம் நிர்வாகத்தில் நடந்து வரும் முறைகேடுகள் தொடர்பாக இந்து அறநிலையத் துறைக்கு பல்வேறு புகார் மனுக்கள்வந்தன.
இது தொடர்பாக, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கோயில் நிர்வாக நலன் கருதியும், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட கோயில் நிலத்தை மீட்கவும்இந்து அறநிலையத் துறை சட்டப்பிரிவு, 49(1)கீழ், திருநீலகண்டேஸ் வரர் கோயிலை, செங்கல்பட்டு மாவட்ட இந்து அறநிலையத் துறையினர், வருவாய், காவல் துறை அதிகாரிகள் இணைந்து நேற்று தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அக்கோயில் தக்காராக, தாம்பரம் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோயில் செயல் அலுவலராக உள்ள தீபா பொறுப்பேற்றுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT