Published : 09 Apr 2024 06:20 AM
Last Updated : 09 Apr 2024 06:20 AM

வாக்குப்பதிவு நாளில் விடுமுறை அளிக்காத கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை: தொழிலக பாதுகாப்பு இயக்குநர் எச்சரிக்கை

சென்னை: வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ம் தேதி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வே.செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிகபணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடியவிடுப்பு வழங்க வேண்டும் என தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைஅமைக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறைஅளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கீழ்கண்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

அதன்படி, இணை இயக்குநர்கள் எம்.வி கார்த்திகேயனை 9444221011, 044 – 22502103 ஆகிய எண்களிலும், கமலக்கண்ணனை 9884675712 என்ற எண்ணிலும், ஆட்சி அலுவலர் எஸ்.சூரியாவை 9884470526 என்ற எண்ணிலும், துணை இயக்குபர் கே.சுவேதாவை 9962524442 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x