“தாமரையும், இரட்டை இலையும் நாணயத்தின் இரு பக்கங்கள்” - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து நேற்று  பிரச்சாரம்  செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
Updated on
1 min read

பெரம்பலூர்: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று பேசியது: கிராமப்புற ஏழை, எளிய மக்களை பசி, பட்டினி இல்லாமல் காப்பாற்றி வந்த நூறு நாள் வேலை திட்டத்தை 28 நாட்களாக குறைத்தவர் மோடி. மீண்டும் அவர் வெற்றி பெற்றால் இந்த திட்டத்தை இல்லாமல் ஆக்கிவிடுவார்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாத பிரதமர் மோடி, அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.16 லட்சம் கோடிகடனை தள்ளுபடி செய்கிறார். மத்திய அரசு நிறுவனங்களில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்100 நாட்களில் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மோடிக்கு காவடி தூக்கி காப்புக்காய்த்துப்போன பழனிசாமி தான் இப்போது மாறுவேடம் போட்டு வருகிறார்.

தாமரையும், இரட்டை இலையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இவர்களில் யாருக்கு ஓட்டுபோட்டாலும் ஒன்று தான். தேர்தல் முடிந்த உடன் இவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, எம்எல்ஏ பிரபாகரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in