ராஜபாளையத்தில் இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ‘ரோடு ஷோ’ - ஏற்பாடுகள் தீவிரம்

ராஜ்நாத் சிங் | கோப்புப் படம்
ராஜ்நாத் சிங் | கோப்புப் படம்
Updated on
1 min read

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இன்று (திங்கள்கிழமை) மாலை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ‘ரோடு ஷோ’ மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராஜபாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் இன்று மாலை 5 மணிக்கு ராஜபாளையத்தில் ‘ரோடு ஷோ’ நடத்துகிறார்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜான் பாண்டியனை ஆதரித்து தென்காசியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரோடு ஷோ நடத்துவதாக அறிவித்து, அதன்பின் இருமுறை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜான் பாண்டியனை ஆதரித்து தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் ‘ரோடு ஷோ’ நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் முதல் பஞ்சு மார்க்கெட் வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ நடத்தி, தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். இதையடுத்து ராஜபாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in