

தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைப்பின் நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.
அமைப்பின் மாநிலத் தலைவர் முத்தமிழ்மணி, பொதுச் செயலாளர்கள் தமிழ்மணி, பசுமலை, துணைத் தலைவர்கள் முருகேசன், பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் நம் நாட்டில் ஜனநாயகமே நிலவாது. பாசிச, சர்வாதிகார, இந்துத்துவா ஆட்சி நிலைநிறுத்தப்படும். சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவர்.
சம்ஸ்கிருத மொழியும், பண்பாடும் திணிக்கப்படும். மனித உரிமைகள் துச்சமாக மதிக்கப்பட்டு, தூக்கி எறியப்படும். எனவே, பாஜக கூட்டணியை அடியோடு முறியடிக்க, இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.