

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட, ரூ.7 கோடிமதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம் அருகேயுள்ள மல்லூர் சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் நேற்று வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது, சேலத்தில் இருந்து மதுரைசென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.7 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கம், 29 கிலோவெள்ளிப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
ஆனால், அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் அலுவலர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்து, ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ராசிபுரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், உரிய ஆவணங்களைக் காட்டி, அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.